தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள காப்பாத்தி முகாம் பகுதியைச் சார்ந்தவர் ஜெயகாந்தன் இவர் இருசக்கர வாகனத்தில் சிந்தலக்கரை கோவில் அருகே சென்று கொண்டிருந்த பொழுது டாட்டா சுமோ வாகனம் அவர் மீது மோதி நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இது தொடர்பாக எட்டையாபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்