காளையார்கோவில்: கல்லுவழி கொள்ளை சம்பவத்தில் உண்மை குற்றவாளியை பிடித்ததையொட்டி கிராமத்தினர் ராமநாதபுரம் சரக டிஐஜியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கல்லுவழியில் ஜன.26-ம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கொடூரமாகத் தாக்கிவிட்டு கொள்ளையடித்த சம்பவத்தில் ஈடுபட்ட தென்னீர்வயலை சேர்ந்த தினேஷ்குமாரை போலீசார் கைது செய்த நிலையில் உண்மை குற்றவாளியை கைது செய்த காவல்துறையை பாராட்டி நன்றி தெரிவிக்கும் விதமாக கல்லுவழி கிராமத்தினர் ராமநாதபுரம் சரக டிஐஜி துரையை சந்தித்து பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.