வத்தலகுண்டு புனித தோமையார் ஆலயம் சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன இதில் முக்கிய நிகழ்வான கிறிஸ்து பிறப்பை இல்லங்கள் தோறும் சென்று அறிவிக்கும் கேரல் சர்வீஸ் நிகழ்வு நாள்தோறும் நடைபெற்று வருகிறது அருட் தந்தையர்கள் பால்ராஜ், மதியழகன் ஆகியோர் தலைமையில் அருட்சகோதரிகள் மற்றும் தேவாலய பாடல் குழுவினர் குழந்தை இயேசு சிலையை ஒவ்வொரு இல்லங்களுக்கும் எடுத்து சென்று கிறிஸ்து பிறப்பை பாடலாக பாடி பிராத்தனை செய்தனர்