தூத்துக்குடி: மாநகராட்சியில் சமூக நீதி உறுதிமொழி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஏற்பு
தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி தூத்துக்குடி மாநகராட்சியில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.