ஸ்ரீவைகுண்டம்: அரசு மருத்துவமனையில் நர்ஸ் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ. 2,44,800/- பணத்தை மோசடி செய்தவர் கைது
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு தெரியாத நம்பரில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பை ஏற்ற மேற்படி இளைஞரிடம் பேசிய மர்ம நபர் தான் ஒரு அரசு வேலை வழங்கும் அதிகாரி எனவும் அதற்கு பணம் செலவாகும் எனவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதனை நம்பி மேற்படி இளைஞர் தனது மனைவிக்கு அரசு வேலை வாங்கித் தருமாறு கேட்டுள்ளார்.