பழனி: இறந்தவரின் உடலை வாங்க மறுத்து பழனி அரசு மருத்துவமனையில் உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா வடகவுஞ்சி அருகே உள்ள பட்டியக்காடு மலை கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன்(27). பழங்குடியினத்தை சேர்ந்த பாண்டியன் கூலி வேலைக்கு சென்று வருகிறார். பாண்டியன் தனது இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டிராக்டர் ஒன்று பாண்டியன் மீது மோதியதில் படுகாயமடைந்தார். படுகாயமடைந்த பாண்டியனை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டியன் உயிரிழந்தார்.