இளையாங்குடி: சோலஊரணி பகுதியில் வேப்பமரக் கிளை உடைத்ததைத் தொடர்ந்து தாக்குதல் – போலீசார் விசாரணை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள சோலஊரணி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (60), தனது வீட்டின் அருகே உள்ள வேப்பமரத்தின் கிளையை உடைத்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் அப்பகுதியைச் சேர்ந்த மார்ட்டின் கிறிஸ்டோபர் (30), சம்பூரணம் (50) ஆகியோர், ராஜேந்திரனின் மனைவி கன்னிகை மேரியை தாக்கி அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக ராஜேந்திரன், இளையான்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.