தஞ்சாவூர்: வாங்க வாங்க பெரியநாயகி அம்மனை தரிசிக்க வாங்க : தஞ்சை பெரிய கோயிலில் நவராத்திரி விழா கோலாகலம்
தஞ்சாவூர் பெரிய கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு தினமும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து பயன்பெற அழைக்கப்பட்டுள்ளனர். இன்னும் இரண்டு நாட்களே உள்ளதால் பக்தர்கள் திரளாக பங்கேற்று அம்மனை தரிசித்து அருள் பெறலாம்.