திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி பேரூராட்சிக்கு உட்பட்ட T. புதுப்பட்டி மக்களுக்கு குடிநீர் கேட்டு CPI-ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமையில் ஒன்றிய துணை செயலாளர் பாலன் முன்னிலையில் கன்னிவாடி பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கன்னிவாடி பேரூராட்சி மற்றும் காவல்துறையுடன் ஏற்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தை முடிவில் T.புதுப்பட்டி மக்களுக்கு 10-நாட்களுக்குள் வாரம் ஒரு முறை டிராக்டர் மூலம் குடிநீர் வழங்குவதாக உறுதி அளித்தனர்.