தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சி சந்தையார் குடியிருப்பைச் சேர்ந்தவர் சண்முகசாமி மகன் வீரபொம்மு (55), இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் எலெக்ட்ரிசியன் ஆக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்து தனது மோட்டார் பைக்கில் பாஞ்சாலங்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். தூத்துக்குடி புதிய துறைமுகம் - மதுரை மடத்தூர் பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த ஒரு கார் இவரது பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.