சென்னையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சி மாநில இளைஞரணி தலைவர் சூர்யா மற்றும் பாஜக தொண்டர்களை திமுகவினர் தாக்கியதை கண்டித்து ஒட்டன்சத்திரம் இளைஞரணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சட்டமன்றத் தொகுதி பார்வையாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இளைஞரணி தலைவர் சூர்யா மற்றும் ஒன்றிய இளைஞர் அணி துணை தலைவர் புதுச்சத்திரம் நடராஜன் நிர்வாகிகள் கணபதி, பொம்மிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.