அரியலூர்: மாவட்ட தையல் தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா சிலையருகே ஆர்ப்பாட்டம்
அரியலூர் அண்ணா சிலையருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்ட தையல் தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான நலவாரிய தொழிலாளர்களுக்கு வழங்கும் கல்வி மற்றும் வீடு கட்ட நிதிஉதவி உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் தையல் நல வாரிய தொழிலாளர்களுக்கும் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.