தூத்துக்குடி: பைசன் திரைப்படம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது விமான நிலையத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் பேட்டி
திரைப்பட இயக்குனர் இயக்குனர் மாரி செல்வராஜ் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார். அவரது ரசிகர் மன்றம் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில், எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் பைசன் எனது ஐந்தாவது படமாக ரிலீஸ் ஆகி உள்ளது பைசன் ரிலீஸ் ஆன நாளிலிருந்து மிகப்பெரிய மக்கள் கொண்டாட்டத்தையும் வெற்றியும் அடைந்துள்ளது என்றார்.