கரூர்: ராயனூர் கடைவீதி, செல்லாண்டிபாளையம் பகுதிகளில் பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் வாக்கு சேகரித்தார்
Karur, Karur | Apr 3, 2024 கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் செல்லாண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் வி.வி.செந்தில்நாதன் தாமரைச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கரூர் மாவட்ட செயலாளர் தங்கவேல், ஐஜேகே கட்சி நிர்வாகிகள், ஜனநாயக முன்னேற்ற கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.