திருவிடைமருதூர்: 3500 நெல் கொள்முதல் நிலையங்களில் அடிப்படை வசதிகளே இல்லை ... கடுமையாக குற்றம் சாட்டிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் வட்டத்துக்கு உட்பட்ட குறிச்சி நெல் கொள்முதல் நிலையத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டார் . பின்னர் அவர் கூறுகையில், தமிழகத்தில் உள்ள 3500 நெல் கொள்முதல் நிலையங்களில் உரிய அடிப்படை வசதி, பராமரிப்பு இல்லாமல் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ஒரு ஆண்டுக்கு 120 லட்சம் டன் நெல் சாகுபடி செய்யப்படும் நிலையில் 48 லட்சம் டன் மட்டுமே அரசு கொள்முதல் செய்கிறது. மீதமுள்ள நெல் தனியாரிடம் குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படும் சூழல் உள்ளது.