அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தில் பழனி ஒட்டன்சத்திரம் வேடசந்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளது. இந்த மேற்கு மாவட்ட தலைவராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் காசிபாளையம் சாமிநாதன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் மாநில பொதுக்குழு உறுப்பினராகவும் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராகவும் செயல்பட்டு வந்தார்.