தமிழக முதலமைச்சர் திண்டுக்கல்லுக்கு வருகை தருவதை ஒட்டி முதல்வருக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக வேடசந்தூர் போலீசார் நான்கு பேருக்கு பலத்த பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர். இதில் முதல்வரை நேரில் சந்தித்து குடகனாறு வல்லுநர் குழு அறிக்கையை வெளியிட கோரிக்கை வைக்க அனுமதி கேட்ட குடகனாறு பாதுகாப்பு சங்க தலைவர் ராமசாமி, ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று ஒருவர் கூறியதற்காக தமிழ்நாடு ரிப்போர்ட்டர் சங்க மாநில தலைவர் இளங்கோ, இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த ராமச்சந்திரன் மற்றும் ஜகா ஆகியோருக்கு பாதுகாப்பு.