காளையார்கோவில்: அரண்மனைச் சிறுவயலில் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி எல்லைப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே அரண்மனைச் சிறுவயலில் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லைப் பந்தயம் நடைபெற்றது. இதில் சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து 49 மாட்டு வண்டிகள் பங்கேற்றன.