தூத்துக்குடி: மருதன் வாழ்வு கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்கப்படாததை கண்டித்து ஆட்சியரகம் முற்றுகை
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மருதன் வாழ்வு கிராமத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் மானாவரி பயிராக உளுந்து ,பாசி பயிறு, கம்பு, மக்காச்சோளம் ஆகிய பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு இவர்கள் பயிர் செய்த நிலையில் மழை வெள்ள பாதிப்பு காரணமாக முழுவதுமாக பயிர்கள் அழிந்து சேதமடைந்தது.