தூத்துக்குடி: வஉசி துறைமுகத்தில் கப்பலில் வந்த கண்டெய்னரில் ரூ.5 கோடி மதிப்பிலான சீன பட்டாசுகள் பறிமுதல் 4 பேர் கைது மத்திய வருவாய் புலனாய்வுத்துறை நடவடிக்கை
தூத்துக்குடி துறைமுகத்திற்கு கப்பலில் வந்த கண்டெய்னர் ஒன்றை சந்தேகத்தின் பெயரில் தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஒரு கண்டெய்னரில் தடை செய்யப்பட்ட சீன பட்டாசுகள் இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் இது தொடர்பாக நான்கு பேரை கைது செய்துள்ளனர்.