அறிவியல் ஆர்வத்தையும் அறிவியல் அணுகுமுறைகளையும் மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து ‘மாநில அளவிலான அறிவியல் திருவிழா 2026’ திண்டுக்கல் எம்.எஸ்.பி. பள்ளி அரங்கத்தில் 28.01.2026 முதல் 03.02.2026 முடிய 7 நாட்கள் நடைபெற உள்ளது. திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற முதல் சுற்று அறிவியல் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் சரவணன் பார்வையிட்டு மாணவ/மாணவியருடன் கலந்துரையாடினார்.