அருப்புக்கோட்டை: "அருப்புக்கோட்டையில் ஜவுளி பூங்கா கொண்டு வர நடவடிக்கை" - காந்திநகரில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் பிரச்சாரம்
அருப்புக்கோட்டையில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் இன்று ஏப்ரல் 10 காந்திநகர், வெள்ளக்கோட்டை, ராமசாமிபுரம், நேரு மைதானம் ஆகிய பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் "நெசவாளர்கள் வாழும் அருப்புக்கோட்டையில் ஜவுளி பூங்கா கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்வேன், குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்வேன்" எனக் கூறி வாக்கு சேகரித்தார்.