திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் தொழில் வல்லுநர் பிரிவு சார்பில் ஆலோசனைக் கூட்டம் பிரிவின் மாநில தலைவர் சுந்தர்ராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஜிஎஸ்டி மறுசீராய்வு குறித்து கையேடு வெளியிடப்பட்டது. இதில் ஜிஎஸ்டி 4 பிரிவுகளாக இருந்தது. அதனை மக்களின் நலன் கருதி மத்திய அரசு நிதி அமைச்சர் இரண்டு பிரிவுகளாக ஜிஎஸ்டி மாற்றி அமைத்து மறு சீராய்வு செய்து 45 நாட்கள் ஆகின்றன என்றார்.