அரியலூர்: தமிழ் கல்வி இயக்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அண்ணா சிலையருகே பட்டினி போராட்டம்
தமிழ்வழி கல்வி இயக்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணா சிலை அருகே பட்டினி போராட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளியில் தமிழ்வழியில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 60 சதவீத இட ஒதுக்கீடு உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.