நத்தம் அருகே கம்பளியம்பட்டியை சேர்ந்த சுக்ரீவன் என்ற சூர்யா இவர் அவர்களுக்கு சொந்தமான அரிசி அரவை மில்லில் வேலை செய்து வந்தார். சனிக்கிழமை இரவு மில்லில் வேலை முடிந்து கம்பிளைம்பட்டிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கம்பளியம்பட்டி அருகே உள்ள கருநாச்சி அம்மன் கோவில் குளம் அருகே மர்ம நபர்களால் தலையில் கல்லை போட்டு சுக்ரீவன் என்ற சூர்யா படுகொலை செய்யப்பட்டு கிடந்தார் நத்தம் போலீசார் சுக்ரீவன் என்ற சூர்யாவின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்