தருமபுரி: தீபாவளி பண்டிகைக்காக தருமபுரியில் இனிப்பு வகைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம். இந்தாண்டு புதுவரவாக முந்திரி இனிப்பு வகைகள் அறிமுகம்.
தீபாவளி பண்டிகை என்றாலே நமக்கு முதலில் தோன்றுவது பட்டாசு, புத்தாடை, வீட்டில் செய்யும் முருக்கு, அதிரசம் என்று அனைவரும் தெரியும். தற்போது இருக்கும் கால சூழலில் வீட்டில் இனிப்பு வகைகள் தயாரிக்க நேரமில்லாத காரணத்தால் கடைகளில் வகை வகையான இனிப்புகள் வாங்கி விடுகிறோம். தீபாவளி பண்டிகைக்;கு ஒரு சில தினங்களே இருப்பதால் இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.