மானாமதுரை: சின்ன கண்ணூர் கிராம
சுடுகாட்டுக்கு சாலை வசதி இல்லை என புகார் ஆட்சியர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய ஆதிதிராவிடர் ஆணையம் உத்தரவு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள சின்ன கண்ணூர் கிராமத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த யாரேனும் உயிரிழந்தால் அவரது உடலை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல சாலை வசதி இல்லாமல் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் அவதிப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சமூக ஆர்வலர் கடலூர் நாயகம் என்பவர் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தில் புகார் மனு அளித்தார்