பாலக்கோடு: மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரி, தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரி வட்ட தலைவர் நக்கீரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாங்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால், தமிழ்நாடு அரசு மாங்காய் கிலோ ஒன்றுக்கு 30 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய வேண்டும்என்றும்,தமிழ்நாடு அரசு முத்தரப்பு கூட்டம் நடத்தி பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.