கரூர் மண்மகாலை சேர்ந்தவர்கள் ஆறு பேர் ஒரு ஜீப்பில் குஜிலியம்பாறை பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு வந்தனர். சுவாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் கரூரை நோக்கி சென்றனர். ஜீப் குஜிலியம்பாறை தாலுகா டி கூடலூர் தாண்டி சென்ற பொழுது திடீரென இரு சக்கர வாகனம் குறுக்கே புகுந்தது. இதனால் ஜீப் டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் இருசக்கர வாகனத்தின் மீது மோதி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இருசக்கர வாகனத்தில் சென்றவர் லேசான காயம் அடைந்தார்.