தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் ஜார்ஜ் ரோட்டில் உள்ள தனியார் ஹாலில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் அப்போது தேர்தல் நேரத்தில் பூத் ஏஜெண்டுகள் எப்படி பணியாற்ற வேண்டும் எப்படி பணியாற்றினால் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற முடியும் என்ற ஆலோசனை நடைபெற்றது.