தூத்துக்குடி: திருநெல்வேலி: ரஹமத் நகர் முத்தம்மாள் காலனி ஆகிய பகுதிகளில் வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் இன்று அதிகாலை வரை பலத்த மழை பெய்தது இதன் காரணமாக மாநகரில் தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். தூத்துக்குடி முத்தம்மாள் காலனி ரஹமத் நகர் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளை மழை நீர் சூழ்ந்து உள்ளதுடன் கழிவு நீரும் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.