பழனி: தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சபரிமலை ஐயப்பன் சீசனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக 3 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம்
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ததற்காக குவிந்துள்ளனர். படிப்பாதை, யானை பாதை ,வழியாக ஆண்கள் ,பெண்கள் என இரண்டு வரிசையாக பிரிக்கப்பட்டு செல்போன்கள் கொண்டு செல்லாதவாறு ஓலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தும் , சோதனை செய்யப்பட்டு பக்தர்களை மலைக்கோவிலுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேலும் மின் இழுவை ரயிலில் வரிசையில் சுமார் 2 மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.