ஆலங்குளம்: அரசு துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகளை காவல் நிலையம் அழைத்து வந்து காவல்துறையினர் பணி குறித்து விளக்கம்
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொண்டலூர் அரசு துவக்கப்பள்ளியில் பயிலும் மாணவச் செல்வங்களை காவல் நிலையம் அழைத்து வந்து காவல்துறையின் பணிகள் குறித்து எடுத்துரைத்து மாணவர்கள் யாரும் தீய வழியில் சென்று விடக்கூடாது என அறிவுரை வழங்கப்பட்டது