சிவகங்கை: சிவகங்கையில் இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த குட்டை சங்கர் (48), தனுஷ்ராஜா (45) ஆகிய இருவரும் கஞ்சா வைத்திருந்ததாக நகர் போலீஸார் கைது செய்தனர்.இந்நிலையில், இவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி உத்தரவிட்டார்.