குஜிலியம்பாறை: ஆணைப்பட்டி அரசு பள்ளியில் மின்னல் தாக்கி 2 மாணவர்கள் படுகாயம்
கருங்கல் ஊராட்சி ஆணைப்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. காலை முதலே தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்து வந்தது. இந்த நிலையில் அங்கு படித்து வரும் குணசக்தி என்ற 6 ஆம் வகுப்பு மாணவனும், பூவரசன் என்ற 6 ஆம் வகுப்பு மாணவர்கள் ரெஸ்ட் ரூம் செல்வதற்காக வெளியே வந்த போது கையில் வைத்திருந்த குடை மீது மின்னல் தாக்கி உள்ளது. இதில் காயம் அடைந்த மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனை அழைத்து சென்றனர். அங்கு மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.