மயிலாடுதுறை: கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக கொத்தங்குடி ஊராட்சியில் மின்கம்பத்தின் மீது வேப்பமரம் சாய்ந்து விபத்து
மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது நேற்று இரவு விடிய விடிய பலத்த மழை பெய்தது. பல்வேறு இடங்களில் காற்றுடன் மழை பெய்த காரணத்தால் மரங்கள் பெயர்ந்து விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது. தரங்கம்பாடி தாலுக்கா கொத்தங்குடி ஊராட்சியில், காற்றின் காரணமாக வேப்பமரம் ஒன்று முறிந்து விழுந்ததில், மின்சார கம்பங்கள் சேதமடைந்தன. இதன் காரணமாக கொத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இன்று காலை 7 மணி அளவில் நடந்த இந்த விபத்தில் நல் வாய்ப்ப