தூத்துக்குடி மில்லர்புரம் சிலோன் காலனியை சேர்ந்தவர் அஜய் என்ற ஜப்பான் (19), இவர் மீது ஒரு கொலை வழக்கு உள்பட 3 வழக்குகள் உள்ளன. இவர் இன்று இரவு பசும்பொன்நகர் 2-வது தெருவில் சென்று கொண்டு இருந்தாராம். அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 3 பேர் திடீரென அஜய் என்ற ஜப்பானை வழிமறித்து சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர்.