ஒரத்தநாடு: ஆட்கள் வராத பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் : ஒரத்தநாட்டில் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் தேமுதிக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் புதிய நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் வராததால் ஆவேசம் அடைந்த பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இவ்வாறு கூட்டம் இல்லாமல் நடக்கும் கடைசி கூட்டம் இதுவாக தான் இருக்க வேண்டும் என ஆவேசமாக பேசியதுடன் எச்சரிக்கையும் விடுத்தார்.