கரூர்: 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறையில் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
Karur, Karur | Sep 24, 2025 மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையின் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தின் பொழுது தூய்மை காவலர்களுக்கு மாதாந்திர ஊதியத்தை பத்தாயிரம் ஆக உயர்த்தி ஊராட்சி மூலம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.