வேடசந்தூர் திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் கிரியம்பட்டியில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்குள் யார் மோட்டார் சைக்கிளை முன் பக்க சக்கரத்தை தரையில் உரசாமல் தூக்கியபடியே நீண்ட தூரம் ஓட்ட முடியும் என்று போட்டி வைக்கப்பட்டது. இதனால் ஏராளமான மாணவர்கள் விலை அதிகம் உள்ள மற்றும் அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை கல்லூரிக்கு கொண்டு வந்தனர். கல்லூரியின் முன்பாக நான்கு வழிச்சாலையில் போட்டி நடைபெற்றது. சாகசம் செய்த மாணவர்களை போலீசார் பிடித்தனர்.