திண்டுக்கல் அருகே உள்ள வங்கமனூத்து பகுதியை சேர்ந்தவர் மகாராஜன் மனைவி வள்ளியம்மாள். இவர்களுக்கு பிறந்து 45 நாட்களான நிரஞ்சனா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் வள்ளியம்மாள் அய்யலூரில் உள்ள ஒரு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். தூங்கிக் கொண்டிருந்த குழந்தை திடீரென அசைவின்றி கிடந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த வள்ளியம்மாள் மற்றும் குடும்பத்தினர் குழந்தையை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.