கரூர்: காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபடுபவர் மீது நடவடிக்கை வேண்டி வன்னியர் மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் மனு
Karur, Karur | Sep 22, 2025 கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வன்னியர் மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சக்தி படையாட்சி தலைமையில் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு காவிரி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் கடத்தலில் ஈடுபடுபவர் மீது நடவடிக்கை வேண்டி மனு அளித்தார். நெரூர் காவிரி ஆற்று பகுதியில் இருந்து குடிநீர் செல்வதாகவும் மணல் கடத்தலை தடுக்கவில்லை என்றால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என கூறினார்.