தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வது வார்டு பகுதியில் அமைந்துள்ளது திருவிக நகர் மற்றும் இந்திரா நகர் இங்கு சுமார் 2000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் இந்தப் பகுதியில் மழை நீர் வடிகால், கழிவுநீர் கால்வாய் மற்றும் தெருவிளக்கு சுகாதார வசதி உள்ளிட்டவைகளை மாநகராட்சி நிர்வாகம் முறையாக செய்யாததால் இந்த பகுதி பொதுமக்கள் மழைக்காலம் உள்ளிட்ட பல்வேறு காலங்களில் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.