வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட் மற்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை வரை தூத்துக்குடி மாநகரப் பகுதி மற்றும் மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு மிதமான மழை பெய்தது.