காரைக்குடி: சரக்கு வாகனங்களை குறிவைத்து நடக்கும் திருட்டு- மருதுபாண்டியர் நகரில் டாட்டா ஏசியில் பேட்டரி திருடிய CCTV காட்சி வெளியீடு
காரைக்குடி ரயில்வே ரோடு மருதுபாண்டியர் நகரில் இரும்பு கடை நடத்தி வருபவர் ஆறுமுகம் 40. இரும்புகளை ஏற்றி செல்ல இரண்டு டாட்டா ஏசி வாகனம் வைத்திருக்கிறார். இரண்டு நாட்களுக்கும் முன்பு காலையில் வந்து கடையில் நின்று கொண்டிருந்த tata ace வாகனத்தை பார்த்தபோது இரண்டு வாகனங்களிலும் பேட்டரி திருடு போயிருந்தது. அதிர்ச்சி அடைந்தவர் காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.