திண்டுக்கல் கிழக்கு: மாநகராட்சி பகுதிகளில் எஸ்ஐஆர் படிவங்கள் திரும்பப் பெரும் பணியினை ஆணையர் ஆய்வு
திண்டுக்கல் மாநகராட்சியில் SIR விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து உடனடியாக வழங்க பொதுமக்கள் அறியும் வகையில் ஆட்டோ மூலம் விளம்பரம் செய்யும் பணியை மாவட்ட வருவாய் அலுவலர் சுகந்தி துவக்கி வைத்தார். தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் R.M. காலனி, MVM. நகர், EVR சாலை பகுதி, மேட்டுப்பட்டி பகுதிகளில் வீடு வீடாக சென்று SIR விண்ணப்பங்கள் சேகரிக்கும் பணியை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்