புதுக்கோட்டை: கோட்டூரில் திமுகவினரின் ஆதரவோடு கோவில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்காவிட்டால் ஆதார் ரேஷன் அட்டைகளை ஒப்படைப்போம் மக்கள் வேதனை
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டூர் கிராமத்தில் ஆலயத்திற்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஆக்கிரமித்து பொதுபாதையை தடுத்திருப்பதாகவும், திமுகவின் அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் ஆதரவு இருப்பதாக கூறுவதாகவும், பொது பாதையை மாவட்ட நிர்வாகம் மீட்டு தராவிட்டால் வரும் திங்கட்கிழமை ஆதார் ரேஷன் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கப் போவதாக கிராம மக்கள் ஆட்சியரகத்தில் தெரிவித்தனர்.