அருப்புக்கோட்டை: பாலவநத்தம் அருகே அருப்புக்கோட்டை சாலையில் கார் மீது இருசக்கர வாகனம் மோதி இளைஞர் பலி
விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் சிவப்பிரியன் (20). இவர் தனது தாய் சுமதியுடன் கோவிலுக்கு செல்வதற்காக பைக்கில் பாலவனத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அருப்புக்கோட்டை சாலையில் முன்னால் சென்ற கார் திடீரென பிரேக் போட்டதால், அந்தக் காரின் மீது பைக் மோதியதில் சிவப்பிரியன் உயிரிழந்தார். படுகாயமடைந்த சுமதி மதுரை தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.