தூத்துக்குடி: தவெக சார்பில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட மாநில துணைப் பொதுச் செயலாளர் சுபத்ரா தமிழ்ச்சாலை ரோட்டில் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தமிழக வெற்றி கழகத்திற்கு புதிய நிர்வாகிகளை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நியமனம் செய்து வருகிறார். இதைத்தொடர்ந்து தூத்துக்குடியைச் சேர்ந்த சுபத்ரா முருகன் தமிழக வெற்றிக்கழக மாநில துணை பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து தூத்துக்குடி மாநகர பகுதிகளில் தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து இன்று மரியாதை செலுத்தினர்.