ஸ்ரீவைகுண்டம்: சிவராமங்கலம் கிராமத்தில் ஆற்றில் சிக்கிய 27 ஆடுகள் தீயணைப்புத் துறையினரால் மீட்கும் வீடியோ வெளியீடு
தாமிரபரணி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வந்த காரணத்தினால் ஸ்ரீவைகுண்டம் அருகே சிவராமங்கலம் கிராமத்தில் உள்ள 27 வளர்ப்பு ஆடுகள் வெள்ளிக்கிழமை மாலை வெளியில் வர முடியாமல் தண்ணீருக்குள் மாட்டிக்கொண்டது. இதனைத் தொடர்ந்து ஆட்டின் உரிமையாளரை அழைத்துக் கொண்டு அந்தப் பகுதிக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், ஆடுகளை பத்திரமாக காப்பாற்றி கரை சேர்த்தனர். ஆடுகளை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களின் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளிவந்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்